பிஸ்கட்
ராகி, கம்பு மாவு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த மாவுக்கலவையில் வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் பிஸ்கட் மாவு தயார்.


தேவையானவை:
ராகி மாவு - 50 கிராம்
கம்பு மாவு - 50 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 30 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி
செய்முறை:
ராகி, கம்பு மாவு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த மாவுக்கலவையில் வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் பிஸ்கட் மாவு தயார். சப்பாத்தி கட்டையில் வெண்ணெய் தேய்த்து தயாராக பிஸ்கட் மாவை வைத்து பிஸ்கட் தடிமனாக உருட்டி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய பிஸ்கட் துண்டில் கத்தியோ அல்லது வேறு பொருட்களை வைத்து அழகுப்படுத்திக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் அரை இன்ச் அளவு மணல் நிரப்பி அதன்மேல் ஒரு தட்டு கவிழ்த்து வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் அடுப்பில் ஸிம்மில் வைக்கவும். ஒரு சமமான தட்டு எடுத்து அதில் வெண்ணெய் தடவி மாவை தூவ வேண்டும். இந்த தட்டை எடுத்து இட்லி பாத்திரத்தில் வைத்து மூடிவிடவும். 15 நிமிடங்கள் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து பிஸ்கட்டுகளை திருப்பி போட்டு மூடி விடவும். மீண்டும் 15 நிமிடங்கள் கழித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பிஸ்கட் தயார்.
குறிப்பு: இந்த மாவில் 6 முதல் 10 பிஸ்கட் வரும். உங்களுக்கு அதிகம் தேவைப்பட்டால் மாவுகளை அதகிப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பிஸ்கட் துண்டுகளை வெட்டி அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...