நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிரகநிலை  ஆய்வு  செய்யும் இந்திய பெண்!

சுவாதிமோகன் கர்நாடக  மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர்.  அவருக்கு  ஒரு வயது  ஆனபோது  அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு  குடிபெயர்ந்துவிட்டது. 

News image
Updated On :21 டிசம்பர் 2021, 6:30 pm

ஆ. கோ​லப்​பன்


சுவாதிமோகன் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர்.

அவருக்கு ஒரு வயது ஆனபோது அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டது.

வானியல் துறையில் உள்ள நாட்டத்தால் இயற்பியல், இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தில் ( எம்.ஐ.டி) வானூர்தி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 2013-ஆம் ஆண்டு முதல் நாசாவின் ஜெட்புராபல்சன் ஆய்வகத்தில் ( ஜே.பி.எல்) திட்டப் பணிக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுபாடுகள் செயல் பாட்டுத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

தரையூர்தியை ( ரோவர்) சுமந்து சென்ற விண்கலம் செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் தரையிறங்குவது. சரியான திசையில் நிலைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றை உறுதி செய்யும் பொறுப்பு இவரைச் சார்ந்தது.

"பெர்சிவியரன்ஸ்' என்ற தரை ஊர்தியை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்தவர். அது செவ்வாயின் தரையைத் தொட்டபோது "டச் டவுன் இஸ் கன்பார்ம்டு' என்று உலகுக்கு அறிவித்தார் இவரே!

1969 -ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்தபோது "தட்ஸ் ஒன் ஸ்மால் ஸ்டெப் பார் ஏ மேன், ஒன் ஜெயண்ட் லீப் ஃபார் மேன்கைண்ட்' என்ற வரலாற்று சிறப்புமிக்க வரிதந்த உணர்வை சுவாதியின் அறிவிப்பு அளித்தது.

இ.டி. எல். சீவ்வென்ஸ் என்ற டிஸண்ட், லாண்டிங் ஆகிய பணிகள் ஏழே நிமிடங்களில் செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக சுவாதிமோகன் மற்றும் அவருடன் பணியாற்றும் விண்வெளி அறிவியல் விஞ்ஞானிகள் ஏழாண்டுகால கடின உழைப்பை அளித்திருக்கிறார்கள்.

2012-ஆம் ஆண்டு "கியூரியாசிட்டி' ரோவரை நாசா, செவ்வாய் கிரகத்தின் வேறொரு இடத்தில் தரையிறக்கியது. அத்துடன் இணைந்து பெர்சிவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய்கிரகத்தின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும். "சுவாதி தி பிந்தி கேர்ள்" என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இந்து மரபுப்படி அவர் தனது நெற்றியில் பொட்டு வைத்திருப்பது வழக்கம். அவர் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் பணியாற்றுவதால் இந்த செல்லப்பெயர் வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.