தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாஃப்ட் வெனிலா கேக்

தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும். கலவை நன்கு நுரைத்து வரும்போது எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும்.

News image
Updated On :29 டிசம்பர் 2021, 12:40 pm

தினமணி

தேவையானவை:

மைதா  - முக்கால் கிண்ணம்
சர்க்கரை - அரை கிண்ணம்
தயிர் - அரைகிண்ணம்
வெனிலா எசென்ஸ்  - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கிண்ணம்
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி


செய்முறை: 

தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும். கலவை நன்கு நுரைத்து வரும்போது எண்ணெய் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். அதனுடன் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக கொட்டி கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்த் தடவி மாவுக் கலவையை அதில் ஊற்றவும்.

மாவு கலவை உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி சிறு தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும். (குக்கரில் தண்ணீர் ஊற்றாமல், கேஸ்கட் மற்றும் விசில் போடாமல் வைக்கவும். மணல் பரப்பி வைக்கும் முறையிலும் இதேபோல் வைக்கலாம்). உள்ளே வைக்கும் பாத்திரம் அலுமினியமாக இருந்தால் நல்லது. 15 நிமிடங்கள் கழித்து ஒருமுறை திறந்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பதத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து குக்கரை இறக்கவும். சுவையான முட்டை இல்லாத சாஃப்ட் வெனிலா கேக் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.