பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

2020- மக்கள்  மனதில் இடம் பிடித்தவர்கள்!

உலகத்தையே புரட்டிப்போட்ட கரோனா பரவல் தொடங்கிய உடனே இன்போஸிஸ் பவுண்டேஷன் தனக்குரிய ரூ.2,500 கோடி சொத்திலிருந்தும் பணத்தை பயன்படுத்தி சுமார் ஒரு லட்சம் ரேஷன் பொருள்கள் அடங்கிய

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 12:30 am

DIN

விருது பெற்ற மருத்துவப் பெண்மணி!

இந்தியாவில் சொந்த முயற்சியில் சம்பாதித்து கோடீஸ்வரரான பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ள பயோகான் நிறுவனர் கிரண்மஜூம்தார்ஷாவின் (67) சொத்து மதிப்பு போபர்ஸ் தகவலின்படி ரூ. 34,310 கோடி. டாக்டர் தேவி ஷெட்டியின் நாராயணா ஹ்ருதலயாவுடன், தன்னுடைய மஜூம்தார் ஷா பவுண்டேஷனை இணைத்து நாட்டிலேயே முதன்முறையாக டெக்னாலஜி பிஸினஸ் இன்குபேட்டர் அடிப்படையில் 10 கார்ப்பரேட் மருத்துவமனைகளை தொடங்கவுள்ளார்.

ஒவ்வொரு இந்தியனும் குறைந்த செலவில் தரமான மருத்துவ உதவி பெறும் வகையில் மருத்துவத்துறையில் சாதனை புரிந்து வருவதாக சர்வதேச லான்செட் சிடிசன்ஸ் கமிஷன் இவரை அங்கீகரித்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளுக்குத் தேவையான மூலப் பொருளான என்சைம் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் கிரண் மஜூம்தார்ஷாவை பாராட்டி ஆஸ்திரேலியா 2020 -ஆம் ஆண்டுக்கான உயர்ந்த "சிவிலியன்' விருது வழங்கி கௌரவித்துள்ளது.

உலக மக்களை காப்பாற்றும் முயற்சி

Story image

உலகத்தையே புரட்டிப்போட்ட கரோனா பரவல் தொடங்கிய உடனே இன்போஸிஸ் பவுண்டேஷன் தனக்குரிய ரூ.2,500 கோடி சொத்திலிருந்தும் பணத்தை பயன்படுத்தி சுமார் ஒரு லட்சம் ரேஷன் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளையும், 24 லட்சம் சுகாதார பாதுகாப்பு மருந்துகள் அடங்கிய தொகுப்பு பைகளையும், கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள மில்லியன் லிட்டர் கணக்கில் சானிடைசர்களையும் வழங்கிய இன்போஸிஸ் நிறுவனர் சுதாமூர்த்தி (70) கூடவே ஹைதராபாத் பள்ளிக் குழந்தைகளுக்காக உணவு தயாரிக்க சமையல் கூடம் ஒன்றையும், மைசூரில் 200 வெண்டிலேட்டர்களையும், 250 படுக்கை கொண்ட கொவைட் சிறப்பு மருத்தவமனைக்குத் தேவையான உதவிகளையும் அளித்துள்ளார். "இது நான் சந்திக்கும் 14-ஆவது பேரழிவு' என்று குறிப்பிட்ட சுதா மூர்த்தி, பொதுமுடக்கத்தின் போது வீட்டில் தினமும் 10 முதல் 12 மணி நேரம் பணியாற்றியதோடு, குழந்தைகளுக்கான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றையும் எழுதி முடித்துள்ளார்.

மூர்க்கமான போராளி!

Story image

டெல்லியில் ஷாகின் பாக் என்ற பகுதியில் மூன்று மாதங்களாக நடைபெற்ற குடியுரிமை மசோதா மற்றும் தேசிய மக்கள் பதிவு மசோதா ஆகியவைகளுக்கு எதிரான போராட்டக்களத்தில் முன்னணியில் நின்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய உத்திரப்பிரதேசம் ஷாபூரைச் சேர்ந்த பெண்மணி பில்கிஸ் பானோ(82) அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார். மீண்டும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டபோது, இவரது வயது முதிர்வு காரணமாக வலுகட்டாயமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கவே போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டதாக இவர் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோபத்தோடு கூறினார். இதன் காரணமாக கடந்த 2020- ஆம் ஆண்டு உலக மக்கள் கவனத்தைப் பெற்ற நூறு சிறந்த பெண்களில் ஒருவராக பில்கிஸ் பானோவையும் தேர்வு செய்து பிபிசி கௌரவித்துள்ளது.

எதிர்ப்பு குரல் எழுப்புவது புதிதல்ல!

Story image

பாலிவுட்டில் நடக்கும் தவறுகளை தனியார் டிவி ஒன்றில் வெளிப்படையாக விமர்சனம் செய்தது, மும்பையில் உள்ள தன்னுடைய அலுவலக கட்டடத்தை நகராட்சி இடித்தது தொடர்பாக மகாராஷ்ட்டிரா அரசு மீது வழக்கு தொடர்ந்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் மரணத்திற்காக நீதிகேட்டது எனதொடர்ந்து பரபரப்பாக மீடியாக்களில் இடம் பிடித்து வந்த கங்கனா ரணாவத் (33) கூடவே முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான "தலைவி'யிலும் நடித்து முடித்துள்ளார். தேசிய பிரச்னைகள் உள்பட எதுவானாலும் தன்னுடைய கருத்தைத் துணிவுடன் கூறும் இவரது தற்போதையே குற்றச்சாட்டு பாலிவுட்டில் மற்ற நடிகர்களை வளரவிடாமல் வாரிசு நடிக - நடிகைகள் தடுக்கின்றனர் என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.