எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வெங்காயப் பக்கோடா மொறு மொறுக்க...

வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தைத் துருவினாற்போல் நறுக்கி, தூள் உப்பு கலந்து பத்து நிமிடங்கள் ஊறியதும் அதிலேயே கடலைமாவு மசாலாப் பொடிகள் சேர்த்துப் பிசைந்து பக்கோடா போடவும் தண்ணீர் சேர்க்காமல் ஒரு

News image
Updated On :1 மார்ச் 2021, 12:26 pm IST


வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தைத் துருவினாற்போல் நறுக்கி, தூள் உப்பு கலந்து பத்து நிமிடங்கள் ஊறியதும் அதிலேயே கடலைமாவு மசாலாப் பொடிகள் சேர்த்துப் பிசைந்து பக்கோடா போடவும் தண்ணீர் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி நெய் மட்டும் விட்டுப் பிசைந்தால் பக்கோடா மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு க்ரீம் கைவசம் இல்லையா ? சிறிது வெண்ணெய்யில் சிறிது பாலைக் கலந்து நன்கு கலக்கிய பின் இதையே கிரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.

எண்ணெய் நிறைய விட்டு ஃப்ரை செய்யும் காய்கறிகளுக்கு (வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு) இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கினால் எண்ணெய்யின் அளவு குறையும். ஆனால் எண்ணெய் நிறைய விட்டுக் செய்தது போல் இருக்கும்.

கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் நிறைய வெங்காயம் இஞ்சி, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்ப்பொடி கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து பக்கோடா மாதிரி போடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.