பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐ.நா. பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியப் பெண்மணி!

ஐ.நா. அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2021, 12:30 am

சுந்தரி காந்தி

ஐ.நா. அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார சவால்கள், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை சமாளிப்பது குறித்தும் ஐ.நா. பொது சபைக்கு இக்குழுவினர் ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.

ஜெயதி கோஷ் 1955-இல் பிறந்தவர். இவர் உலகமயமாக்கல், சர்வதேச நிதி, வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு முறைகள், பாலினம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்னைகள் மற்றும் பருப்பொருளியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர். தற்போது, அமெரிக்காவில் உள்ள ஆம்ஹர்ஸ்ட் நகரில் உள்ள மஸாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

தில்லியை வசிப்பிடமாக கொண்ட இவர், தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேற்கத்திய பாரம்பரிய இசையிலும் திறமை வாய்ந்தவர்.

இவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் இந்தியாவிலுள்ள பல கல்வி நிறுவனங்களிலும் பொருளாதாரம் சார்ந்த தலைப்புகளில் விரிவுரையாற்றியுள்ளார். தில்லியிலுள்ள பொருளாதார ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.