சின்னத்திரை மின்னல்கள்!
நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்து வரும் தொடர் "சித்தி -2'. இந்தத் தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே கரோனாவினால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.


நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்து வரும் தொடர் "சித்தி -2'. இந்தத் தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே கரோனாவினால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமுடக்கத் தளர்வுக்கு பின் சில கதாபாத்திரங்களின் மாற்றத்துடன் தொடர் மீண்டும் ஒளிபரப்பானது. தற்போது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள இந்தத் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து நடிகை ராதிகா சரத்குமாரிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விடையளித்த ராதிகா, "சித்தி 2' தொடர் இப்போதைக்கு நிறுத்தப்பட போவதில்லை' எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் சமூக வலைதளங்களின் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில், திறமை இருந்தும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத பலர் வலைதளம் மூலம் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்தி சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்பு பெற்றுள்ளனர். அந்த வகையில் "டிக்டாக்' மூலம் பிரபலமாகி, கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியின் "கலக்கப்போவது யார்' நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் கேப்ரியலா.
இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் கேப்ரியலா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் "சுந்தரி' எனும் தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். தற்போது இந்த தொடரின் ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில், பலரும் கேப்ரியலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் "நிலா' தொடரும் ஒன்று. இத்தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சியமந்தா கிரண் இதில் இருந்து விலகுவதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சியமந்தா கிரண், ""இதுவரை, "நிலா' தொடரில் ஒரு பகுதியாக இருந்து வந்தது எனக்கு மிகச்சிறந்த அனுபவம். மேலும், அதில் சவாலான கதாபாத்திரத்தில் நான் வாழ்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அஞ்சலி இனி இல்லை. உங்களின் அனைத்து ஆதரவிற்கும் நன்றி'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சியமந்தா எதற்காக தொடரில் இருந்து விலகினார் என இதுவரை எந்த காரணமும் தெரியவில்லை. அதேபோல் சியமந்தாவிற்கு பதிலாக அடுத்து யார் அஞ்சலி கேரக்டரில் நடிக்க உள்ளார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...