எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காய்கறி வைத்தியம்!

உ யர் ரத்த  அழுத்தத்தைக் குறைக்க தினமும்  பூண்டை  உணவில் சேர்த்து வர வேண்டும்.

News image
Updated On :7 ஜூலை 2021, 3:20 pm IST

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.

மூட்டு வலி இருப்பவர்கள் இஞ்சியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டுக் கொண்டு வர வலி நீங்கும். அல்லது இஞ்சியை நறுக்கி நேரடியாகவே வலி இருக்கும் இடத்தில் தேய்த்துக் கொண்டாலும் வலி வீக்கம் குறையும்.

பப்பாளி, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி போன்ற காய்கறிகளை உணவில் அடிக்கடிச் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட தொண்டை வலி குறையும்.

பாலில் வெங்காயம், பூண்டு போட்டு வேகவிட்டு அந்தப் பாலை பருகி வர நெஞ்சில் சேர்ந்துள்ள சளி வெளியேறும்.

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். அதுபோன்று ரத்தசோகை நோய் வருவதை யும் தடுக்கும்.

பாகற்காயை மதிய உணவில் அடிக்கடிச் சேர்த்து வர, ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் தொடர்பான நோய்கள் குணமாக்கும்.

தினமும் 1 கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

ரத்தம் விருத்தியாக பொன்னாங்கண்ணிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து பயன்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் தன்மையும் வெள்ளரிக்கு உண்டு.

இளம் வயதிலேயே சிலருக்கு நரை வரக் காரணம், வைட்டமின் கே சத்து பற்றாகுறையே, பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய் போன்றவற்றில் வைட்டமின் கே சத்து அதிகளவிஸ் உள்ளதால், இந்தக் காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மெல்ல மெல்ல இளநரை மறையும்.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் சக்தியும் வாழைத்தண்டில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.