நெல்லிக்காய்  தொக்கு 

நெல்லிக்காய்களைக் கழுவி, துடைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்த் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 15 நிமிடம் வேக வைக்கவும்.
நெல்லிக்காய்  தொக்கு 

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் - கால் கிலோ
மிளகாய்த் தூள் - 50 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் -
1தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகுப்பொடி - 3 தேக்கரண்டி
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

நெல்லிக்காய்களைக் கழுவி, துடைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்த் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 15 நிமிடம் வேக வைக்கவும். பிறகு எடுத்து ஆறவைத்து கொட்டைகளை நீக்கி புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியாக கடுகுப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com