தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகராசியில் இருந்து விலகுகிறாரா பாரதி!

சன் தொலைக்காட்சியில்  கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல்  ஒளிபரப்பாகி வரும் தொடர் "மகராசி'.  இத்தொடரை  சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார். இத்தொடரில்  திவ்யா ஸ்ரீதர் நாயகியாக நடித்து வருகிறார். 

News image

மகராசியில் இருந்து விலகுகிறாரா பாரதி!

Updated On :17 ஜூன் 2021, 8:09 am

ஸ்ரீ


சன் தொலைக்காட்சியில்  கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல்  ஒளிபரப்பாகி வரும் தொடர் "மகராசி'.  இத்தொடரை  சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார். இத்தொடரில்  திவ்யா ஸ்ரீதர் நாயகியாக நடித்து வருகிறார். 


கரோனா  பொதுமுடக்கம் காரணமாக  இத்தொடரின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது  பாதிப்புகள் குறைந்து  தளர்வுகள்  அறிவிக்கப்படுவதால்,  படப்பிடிப்பை மீண்டும் தொடங்க  திட்டமிட்டு வருகின்றது இத்தொடரின் தயாரிப்புக் குழு. 

இந்நிலையில்,  கரோனா அச்சம் காரணமாக,  பாதுகாப்பு கருதி, இத்தொடரின் படப்பிடிப்பில்  பங்கேற்க  திவ்யா தயக்கம் காட்டுவதாகவும், தொடரில் இருந்து விலகிக் கொள்ள இருப்பதாகவும்  தகவல் வெளியாகிவுள்ளன.  
இதனால்,  திவ்யாவுக்கு பதிலாக பாரதி கதாபாத்திரத்துக்கு  நடிகை ஸ்ரீத்திகாவை  தேர்ந்தெடுத்துள்ளதாகக்  கூறப்படுகிறது.  எனினும்  அதிகாரப்பூர்வ  தகவல் எதுவும் வெளிவரவில்லை. 

அதே சமயம்,  இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில்  ஸ்ரீத்திகா  தனது  இன்ஸ்டா பக்கத்தில், "மகராசி' தொடரின் நாயகன் புவியரசன்  கதாபாத்திரத்தில் நடித்து வரும்  எஸ்.எஸ்.ஆர்யனுடன்   இணைந்து, பாடல் ஒன்றை  பாடி பதிவிட்டுள்ளார். 

ஸ்ரீத்திகா ஏற்கெனவே  " நாதஸ்வரம்',  "கல்யாண பரிசு' போன்ற தொடர்களில்  நடித்து  சின்னத்திரையில்  முன்னணி நடிகையாக  ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டவர், அனுபவமும் நிறைந்தவர் என்பதால் திவ்யாவின் பாரதி  கதாபாத்திரத்துக்கு  பொருத்தமாக இருப்பார் என்கிறது  சின்னத்திரை வட்டாரம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.