தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சின்னத்திரை மின்னல்கள்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் "அம்மன்'. இத்தொடரின் நாயகியாக பவித்ரா கவுடா நடித்து வருகிறார்.

News image
Updated On :30 ஜூன் 2021, 4:30 am

ஸ்ரீ

தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகை!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் "அம்மன்'. இத்தொடரின் நாயகியாக பவித்ரா கவுடா நடித்து வருகிறார். இத்தொடரை பரமேஸ்வரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தத் தொடரில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார் ரஜனி பிரவீன். இவர் கன்னட சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். இந்தத் தொடரின் மூலம் தமிழில் அறிமுகமாகும் இவர், இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், " "அம்மன்' தொடர் மூலம் தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நான் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். இது வில்லி கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மொழிப் பிரச்னை இருந்தாலும், விரைவில் தமிழை கற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது எனது மொழிப் பிரச்னையை சமாளிக்க உதவி வரும் துணை இயக்குநருக்கும், அனைவருக்கும் நன்றி'' என்றார்.


3 மில்லியன் பார்வைகளை கடந்த ஆல்பம்!

Story image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "ராஜா ராணி' தொடரின் முதல் சீசனில் ஜோடியாக நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும். அந்த தொடரில் நடிக்கும்போதே காதலித்து, திருமணமும் செய்து கொண்டனர். இதன்மூலம், விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளாக கருதும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது "ராஜா ராணி' சீசன் -2 இல் நடித்து வருகிறார் ஆல்யா.

ஆல்யா, சஞ்சீவ் இருவரும் இணைந்து ஒரு யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஆல்யாவும் சஞ்சீவும் இணைந்து "காத்தாடி' என்ற ஆல்பம் பாடலுக்கு நடித்து, அதனை அவர்களது யூடியூப் சேனலில் வெளியிட்டனர். அந்த பாடல் ரசிகர்களிடம் வைரலாக, இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.