பொம்மலாட்டத்தில் புதுமை
குழந்தைகளுக்கு கதை சொல்லுவது ஒவ்வொரு விதமாக இருந்தாலும் நம்மை பொருத்தவரை அதை ஒரு பொழுது போக்காகவே கருதுகிறோம்.


குழந்தைகளுக்கு கதை சொல்லுவது ஒவ்வொரு விதமாக இருந்தாலும் நம்மை பொருத்தவரை அதை ஒரு பொழுது போக்காகவே கருதுகிறோம். பெங்களுரைச் சேர்ந்த ஆர்த்தி கத்பாலியா கதை சொல்வதை பொழுதுபோக்காக கருதாமல், குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக நினைக்கிறார்.
இவர் கதை சொல்லும் பாணியே தனி. ஆம். இவர் கதை சொல்லுவது மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெறும் குழந்தைகளுக்குத்தான். இதற்காக கைப்பாவை ( பப்பட்) பொம்மைகளை உடன் கொண்டு செல்கிறார். இவைகள் உதவியுடன் கதை சொல்லும் போது குழந்தைகளிடம் ஏற்படும் சிரிப்பும், குதூகலமும் தனக்கு மன நிறைவை தருவதாக கூறும் ஆர்த்தி, இதற்காகவே "டிக்கிள்ஸ் அண்ட் டேல்ஸ்' என்ற அமைப்பை நிறுவி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்த சேவையை ஒரு கடமையாக செய்து வருகிறார்.
கைப்பாவை பொம்மைகள் உதவியுடன் குழந்தைகளுக்கு கதை சொல்லி மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் ஆர்த்திக்கு எப்படி தோன்றியது?
""நான் என்னுடைய சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்தவுடன் என்ன செய்வதென்று புரியாமல் வீட்டிலேயே இருந்தேன். ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளும்படி என் தந்தை அறிவுறுத்தினார். எனக்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொண்டுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் வேலை கேட்டு விண்ணப்பித்தேன். அதிர்ஷ்டவசமாக ஒரு பள்ளியில் வேலை கிடைத்தது.
தொடர்ந்து பத்தாண்டுகள் பெங்களூரில் வெவ்வேறு நர்சரி பள்ளிகளில் வேலை பார்த்தேன். ஒரு பள்ளியில் எல்கேஜி குழந்தைகளுக்கு எங்கள் அட்டவணையில் உள்ள பாடங்களைத் தவிர வேறு எதையும் கற்றுத் தரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்கள். குழந்தைகளுக்கு வற்புறுத்தி பாடம் சொல்லிக் கொடுப்பதைவிட , கூடவே சற்று மகிழ்ச்சியைத் தரும் வகையில் பாடம் சொல்லித் தருவது அவர்கள் மனதில் சுலபமாக பதியும் என்பது என்னுடைய கருத்து. அதனால், அந்த பள்ளியிலிருந்து விலகி குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் "ஹைட் அண்ட் ஸீக்' என்ற தனியார் அமைப்பொன்றில் சேர்ந்தேன். அங்குதான் என் விருப்பப்படி குழந்தைகளுக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.
குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது கூடவே கைப்பாவை பொம்மைகளை பயன்படுத்தலாமே என்ற யோசனையை நிர்வாகத்தினரிடம் தெரிவித்தேன். அவர்களும் ஒப்புதல் அளித்தனர். என்னுடைய யோசனையை சொல்லிவிட்டேனே தவிர கைப்பாவை பொம்மைகள் என்னிடம் இல்லை. அச்சடித்த அட்டை பொம்மைகளைவைத்து கதை சொல்லத் தொடங்கினேன். குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ரசித்து கைதட்டுவதைப் பார்த்த நிர்வாகம் என்னைப் பாராட்டி ஊக்குவித்தது.
சொந்தமாக "டிக்கிள்ஸ் அண்ட் டேல்ஸ்' நிறுவனத்தை நிறுவினேன். நிகழ்ச்சிகளின் போது நான் பயன்படுத்தும் கைப்பாவை பொம்மைகளின் பெயர்தான் "டிக்கிள்' மற்றும் "டேல்ஸ்' என்பதாகும்.
மகிழ்ச்சிக்கு டிக்கிள்ஸ். கதை சொல்ல டேல்ஸ். இவை தவிர எதிர்த்து போராடுவதற்காக டேக்கிள் என்றொரு பொம்மை. இது பெரிய கண்களுடன் உள்ல மான்ஸ்டர் பொம்மையாகும். சில பொம்மைகளை நானே உருவாக்கினேன். குழன்தைகளுக்கான கதை புத்தகங்கள் மற்றும் இதிகாச கதைகளாகப் பார்த்து தேர்வு செய்வேன்.
பொம்மைகள் மூலம் சொல்லும் கதை சொல்லும்போது குழந்தைகளுக்கு நேரில் பார்ப்பது போன்ற உணர்வுகள் தோன்றுவதால் ரசித்து மகிழ்கின்றனர். என்று கூறும் ஆர்த்தி, விரல்கள் கைப்பாவை பொம்மைகளையும் உருவாக்கியுள்ளார். கைப்பாவை பொம்மை மற்றும் விரல் பொம்மை மூலம் எப்படி கதை சொல்வது என்பது பற்றி புத்தகங்களும் எழுதியுள்ளார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கும் கதை சொல்லி மிகழ்விக்கலாமே என்ற எண்ணம் மனதில் தோன்றியது. சில தன்னார்வதொண்டு நிறுவனங்கள் எனக்கு உதவ முன் வந்தன. நான் தயாரிக்கும் விரல் பொம்மைகள், எழுதும் புத்தகங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை புற்று நோய் சிகிச்சை பெறும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக கொடுத்து உதவுவது மனதிற்கு நிம்மதிதருகிறது. என்கிறார் ஆர்த்தி கத்பாலியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...