

தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை - 1 கட்டு,
சிறுபருப்பு - 50 கிராம்
பூண்டு பல் - 10
வெங்காயம் - 2
தக்காளி -1
காய்ந்த மிளகாய் -5
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை கிண்ணம்
சீரகம் -– அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக சிறுபருப்பை 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். அதன்பிறகு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய் மூன்றையும் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். இப்போது வாணலியில் குக்கர் வைத்து ஊற வைத்துள்ள சிறுபருப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டு பல், மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
வேகவைத்த பிறகு அதனுடன் கீரையினை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். கீரை நன்றாக கொதித்து வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்த் துருவலை இப்போது சேர்க்கவேண்டும். தேங்காய்த் துருவல் சேர்த்த பிறகு 5 நிமிடம் நன்றாக கொதித்த பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டு, பின்னர் இரண்டு வரமிளகாய்களை கில்லி போடவும். லேசாக வறுபட்டதும் தாளித்து கொட்ட வேண்டும். பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.