மனோகரம்
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, நைஸாக அரைத்து அதில் உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.


தேவையானவை :
பாசிப்பருப்பு - 2 கிண்ணம்
பச்சரிசி - 3 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் பால் - அரை கிண்ணம்
வெல்லம் - ஒன்றரை கிண்ணம்
ஏலக்காய் தூள் - 5 சிட்டிகை
நெய் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, நைஸாக அரைத்து அதில் உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முறுக்கு குழாயில் மாவைப் போட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும். பின்னர், வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு பாகுப்பதத்தில் காய்ச்சவும். பொரித்த முறுக்குகளை நொறுக்கி வைக்கவும். பின் நொறுக்கியவற்றுடன் ஏலக்காய்த் தூள், தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து, பின் காய்ச்சியப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும். நன்றாக கலந்தவுடன் மிதமான சூட்டில் இருக்கும் போது உருண்டையாகவோ அல்லது உதிர்த்தோ விடவும். இப்போது சுவையான மனோகரம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...