நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆடத் தெரியாதவர்கள்!

முறைப்படி  நடனம் கற்காத  பலரும் அந்தக் காலத்தில் தமிழ்ப் படங்களில்  நடனம் ஆடி  புகழ்ப் பெற்றுள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2021, 4:39 pm

தினமணி

முறைப்படி  நடனம் கற்காத  பலரும் அந்தக் காலத்தில் தமிழ்ப் படங்களில் நடனம் ஆடி  புகழ்ப் பெற்றுள்ளனர். அந்த வகையில், டி.பி.ராஜலட்சுமி  நடனம் கற்காமலேயே  முதல்  படத்தில்  குறத்தி நடனம்  ஆடி அமோகப் புகழ் பெற்றார்.

அதே போல் பசுபலேட்டி  கண்ணாம்பாவும்  படத்திற்கு  வேண்டிய  அளவு மட்டும் நடனம் கற்றுக் கொண்டு  "அசோக்குமார்'  படத்தில்  மிக அழகாக  நடனம் ஆடிப் புகழ்  பெற்றார். அந்தக் காட்சியில் எம்.கே.டி பாகவதர்  "உனைக்கண்டு மயங்காத  பேர்களுண்டோ..'  என்ற பாட்டை  அருமையாக  பாடி இருந்தார்.

இவர்கள்  இருவரும்  ஏதோ  கொஞ்சமாவது  ஆடிப் புகழ்ப் பெற்றனர். ஆனால், பி.பானுமதியோ  படத்தில்  நடனம் ஆடாமலேயே  "பாவுரமா  பானுமதி' என்று மிகப் புகழ் பெற்றார்.

"சுவர்க்க சீமா'  என்ற தெலுங்குப் படத்தில்  பானுமதி  புறாவை  கையில் வைத்துக் கொண்டு,  "பாவுரமா'  என்று  கொஞ்சிப்பாடி  ஆடும் நடனம் மிகப் பிரசித்தமடைந்தது.  ஆனால்,  அக்காட்சியில்  பானுமதி  ஆடவேயில்லை. உண்மையில்  அந்த நடனத்தை  ஆடியவர்  சௌதாமினி  என்ற நடிகையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.