நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெண்டைக்காய்  பக்கோடா 

வெண்டைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு இட்டு இரண்டையும் கலந்து கொள்ளவும்.

News image
Updated On :27 அக்டோபர் 2021, 12:30 am

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

வெண்டைக்காய் - 100 கிராம்
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 3
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வெண்டைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும. ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு இட்டு இரண்டையும் கலந்து கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெண்டைக்காய், வெங்காயம், மிளகாய், சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்பு இவைகளைச் சேர்த்து வதக்கி, பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பிசைந்து ஒருமணி நேரம் வைக்கவும். பின்னர், நெய்யைவிட்டு நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும், மாவுகலவையை சிறிது, சிறிதாக எடுத்து, விரல்களால் பிசறிவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வெண்டைக்காய் பக்கோடா தயார். மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.