
மரவள்ளிக் கிழங்கு வேர்களில் விளையும் ஒரு மாவுச்சத்து நிறைந்த உணவாகும்.
இந்தியாவிலும் மற்ற வெப்பமண்டலப் பகுதிகளிலும் ஒரு பிரதான உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரமாகும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிட சுவையாக இருக்கும். சரியாக தயாரித்து உட்கொள்ளும்போது, மரவள்ளிக்கிழங்கு நம் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் வல்லமைக்கொண்டது.
எடை அதிகரிப்புக்கு உதவும்:
மரவள்ளிக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்க ஒரு எளிய மற்றும் சத்தான வழி ஆகும். அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் தினசரி கலோரிகளை அதிகரிக்க இது ஒரு சுலபமான வழியாகும். மரவள்ளிக் கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் ஆரோக்கியமான உடல் எடையைக் கொடுக்க வல்லது. இருப்பினும், சுக்ரோஸ் மரவள்ளிக்கிழங்கு வேர்களில் உள்ள சர்க்கரையின் பெரும்பகுதியை கொண்டுள்ளது என்பதால் அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்:
மரவள்ளிகிழங்கில் இரும்பு மற்றும் தாமிரச்சத்து உள்ளது. இந்த தாதுக்கள் ரத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நல்ல சுழற்சி மற்றும் போதுமான ஆக்ஸிஜன் அளவை நிர்வகிப்பதன் மூலம், இந்த தாதுக்கள் ரத்த சோகை போன்ற நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
பிறவி குறைபாடுகளை குறைக்க உதவும்:
மரவள்ளிக்கிழங்கில் ஆ-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் போது, அவை குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவியாக இருக்கும்.
செரிமானத்திற்கு உதவுகிறது:
மரவள்ளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கல், வயிறுவீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்னைகளிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும்.
எலும்பு தாது அடர்த்தியை பலப்படுத்தும்:
இந்த கிழங்கில் அதிக புரதம் மற்றும் வைட்டமின் கே சத்துகள் நிறைந்து உள்ளது. அவை தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை
பயக்கும். எனவே, அவை கைகால்கள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்க உதவியாக இருக்கும்.
அல்சைமர் நோயைத் தடுக்க உதவும்:
ஓர் ஆய்வின்படி, வைட்டமின் கே, மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மூளை நரம்பியல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
இதய பிரச்னைகளைத் தடுக்கிறது:
மரவள்ளிக்கிழங்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் தடுப்பு உட்பட பல இதய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறைந்த சோடியம் உள்ளடக்கம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதிலிருந்து அதிகம் பயனடைகிறார்கள்.
ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்புக்கு உதவுகிறது:
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளில் ஏற்படும் நுண்துளைகள் ஆகும். அதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்கு கால்சியம் சத்து நன்மை பயக்கும். அளவாக மரவள்ளிக் கிழங்கு உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.