பனீர் வெஜ் கொழுக்கட்டை

பனீரை ஒரு டம்ளர் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும். பிறகு, பட்டாணியையும் சேர்க்கவும்.
பனீர் வெஜ் கொழுக்கட்டை

தேவையானவை:

பனீர் - அரை கிண்ணம்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கேரட் துருவல் - 4 தேக்கரண்டி
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி மாவு - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல்  - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் -  ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிது
பொட்டுக்கடலை மாவு - ஒரு தேக்கரண்டி 

செய்முறை: 

பனீரை ஒரு டம்ளர் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும். பிறகு, பட்டாணியையும் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்ததும் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும், ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை மாவு தூவி கலந்து விட்டு, கொத்து

மல்லித்தழை தூவி இறக்கவும். இதுதான் பூரணம். ஆறியதும் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் 2 கிண்ணம் நீர் விட்டு உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். நீர் கொதித்ததும் அரிசி மாவைச் சேர்க்கவும். மாவு வெந்ததும் இறக்கி, கை பொறுக்கும் சூடு வந்ததும், மாவை உருட்டி சொப்பு செய்து உள்ளே பூரண உருண்டையை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து 8 நிமிடம் சிம்மில் வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில் பனீர் கொழுக்கட்டை தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com