தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சின்னத்திரை மின்னல்கள்!: வெள்ளித்திரையில் களமிறங்கும் நடிகை!

விஜய்  தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்  "பாரதி கண்ணம்மா'. இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகிறார்கள்.

News image
Updated On :14 செப்டம்பர் 2021, 6:30 pm

ஸ்ரீ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் "பாரதி கண்ணம்மா'. இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகிறார்கள். இதில் பாரதியின் தங்கையாக அறிவுமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் காவ்யா.

இந்நிலையில், விஜய் டிவியின் மற்றொரு தொடரான "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீர் மரணமடைந்ததால் தற்போது காவ்யா, முல்லையாக நடித்து வருகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யா அடிப்படையில் ஓர் ஆர்க்கிடெக்ட். இவருக்கு நடிகை நயன்தாராவை மிகவும் பிடிக்குமாம். சின்னத்திரை நயன்தாராவாக வலம் வர வேண்டும் என்பதே இவரது ஆசையாம்.

காவ்யா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். இதனால், சினிமா நடிகைகளுக்கு ஈடாக, இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

பெரியதிரையில், விஜய் நடிப்பில் வெளியான "பிகில்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு, காவ்யாவை தேடி வந்ததாம். ஆனால் அப்போது அவர், "பாரதி கண்ணம்மா' தொடரில் பிசியாக இருந்ததால், அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், ""பிகில்' படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், தளபதி படத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்ப நினைத்தாலும் வருத்தமாக இருக்கும்'' என்று தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு, வெள்ளித்திரையில் நல்லதொரு வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு தற்போது பெரியதிரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பரத், வாணி போஜன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே, வெள்ளித்திரையிலும் களமிறங்குகிறார் காவ்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.