அடர் நிற அழகி!
உலகில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அந்த வகையில், பல்வேறு சவால்களை எதிர் கொண்டு, சர்வதேச நவநாகரிக ஃபேஷன் உலகை, தன் அடர்ந்த நிறம் மூலம் ஆள்கிறார் நயாகிம் கேட்வச் என்ற பெண்மணி.


உலகில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அந்த வகையில், பல்வேறு சவால்களை எதிர் கொண்டு, சர்வதேச நவநாகரிக ஃபேஷன் உலகை, தன் அடர்ந்த நிறம் மூலம் ஆள்கிறார் நயாகிம் கேட்வச் என்ற பெண்மணி.
தெற்கு சூடானில் பிறந்த நயாகிம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
மாடலாக வலம் வரவேண்டும் என்ற கனவு அவருக்கு சிறுவயதிலேயே உண்டு. தனது 17 -ஆவது வயதில், ஆஸ்திரேலியாவின் "அடுத்த டாப் மாடல்' என்ற போட்டியில் கலந்து கொண்டபோது, ஆடை வடிவமைப்பாளர்களும், நடுவர்களும் அவரைப் பார்த்து குழம்பி விட்டார்கள். அவரது அடர்ந்த சுருள் முடிக்கு எவ்விதமான அலங்காரம் செய்வது என்று சிகை அலங்கார நிபுணர்களுக்கும் புரியவில்லை. அதனால், நிறவெறியை வெளிப்படுத்தும் கடும் சொற்களால் நயாகிம் தாக்குதலுக்கு உள்ளானார்.
""வெள்ளை நிறம் மட்டுமா அழகு, இப்படி ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிய இந்த உலகின் பொய்யான கட்டமைப்பை உடைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். தன்னம்பிக்கையுடன் மீண்டு வருவதற்கு சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் போட்டோஷாப் ஆகியவை செய்யப்படாத இந்த முகத்தையும் உடல் அமைப்பையும் ஃபேஷன் உலகம் புறந்தள்ளக் கூடாது என்று போராடினேன். காலப்போக்கில் உண்மை அவர்களுக்குப் புரிந்து யோசிக்க ஆரம்பித்தார்கள்'' என்கிறார் நயாகிம்.
அவரது முதல் புகைப்படம் வெளியானபோது உலகமே கொண்டாடியது. நயாகிம்மின் அடர்நிறம் ஃபேஷன் உலகையும், பல முன்னணி விளம்பர நிறுவனங்களையும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களது முதல் தர மாடல்களுக்குள் அவரை முதலாவதாக இடம் பெறச் செய்தனர்.
தற்போது "குயின் ஆஃப் த டார்க்' என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் நயாகிம் இன்று உலகம் முழுவதும் பறந்து கொண்டிருக்கிறார். தன்னைப் போன்று அடர்நிறம் கொண்டவர்களுக்கு ஃபேஷன் உலகில் அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக போராடியும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் இவரது புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் விரும்பிப் பகிர்கின்றனர். நிறம் மட்டுமே அழகல்ல என்பதை சொல்லாலும், செயலாலும் நயாகிம் நிரூபித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...