டிப்ஸ்..  டிப்ஸ்...

சமையல் அறையில் எறும்புகளின் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எறும்புகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூளை தூவினால் போதும்.
டிப்ஸ்..  டிப்ஸ்...


சமையல் அறையில் எறும்புகளின் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எறும்புகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூளை தூவினால் போதும்.

வேகவைக்காத உணவுகள் மீது கிருமித் தொற்றுகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும். மேலும் அவை எப்போதும் ஈரத்தன்மை இருக்கும் பகுதிகளில் பெருகும். அதனால் உங்கள் சமையல் அறையும், சமையல் பொருள்களை வைக்கும் இடமும் நன்றாக உலர்ந்த பகுதியாக எப்போதும் இருக்க வேண்டும்.

சமையலறையில் பயன்படுத்தப்படும் துணிகளில் பாக்டீரியா இருக்கும். அதனால் அவைகளை தினமும் நன்றாக சோப்பிட்டு துவைத்து, வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.

சமையல் அறையில் தரை, கதவு, அங்கிருக்கும் சுவிட்சுகள், கைப்பிடிகள் போன்ற அனைத்தையும் தினமும் துடைத்து சுத்தம் செய்வது அவசியம்.

டிடர்ஜென்ட் திரவத்தில் துணியை முக்கி, எக்ஸ்ஹாஸ்ட் பேன், சிம்மினி போன்றவைகளை வாரம் ஒரு முறை துடைத்து சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

சமையல் அறையில் குறைந்தது இரண்டு ஜன்னல்களாவது இருக்க வேண்டும். அதன் மூலம் நல்ல காற்றும், வெளிச்சமும் சமையல் அறைக்குள் வர வேண்டும். ஜன்னல்களை தினமும் துடைக்க வேண்டும்.

சமைக்கும் போது உணவுப் பொருள்களின் சிதறல்கள்கேஸ் ஸ்டவ்வில் விழும். அவைகளை அவ்வப்போதே அப்புறப்படுத்தி சுத்தப்படுத்திவிடுங்கள். நாளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு வைத்தால் அவைகளை துடைத்து சுத்தப் படுத்துவதே பெரிய வேலையாகிவிடும்.

கேஸ் ஸ்டவ் பர்னரை தினமும் சூடான சோப் தண்ணீரில் முக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

மாதத்தில் ஒருமுறை ஃபிரிட்ஜை துடைத்து சுத்தம் செய்யுங்கள். அப்படி சுத்தம் செய்யாவிட்டால் அதில் இருந்து கெட்டவாடை வீசத் தொடங்கிவிடும். ஃபிரிட்ஜை சுத்தம் செய்யும் போது அதன் உள்ளே இருக்கும் பாட்டில்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அதன் உள் இருக்கும் தேவைப்படாத பொருட்களையும் பழைய பொருட்களையும் அவ்வப்போது நீக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

முட்டைகளை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டு வைத்தால் 10 நாள்கள் வரை கெடாது.

வெயில் காலத்தில் மாவு புளிக்காமல் இருக்க வாழை இலை ஒரு துண்டு அல்லது வெண்டைக்காயின் மத்திய பகுதியை மாவில் போட்டு வைத்தால் மாவு புளிக்காது.

கோஸ் வேகும் போது 2 தேக்கரண் அரிசியை போடுங்கள். துர்நாற்றம் அடிக்காது.

சேனை வேக ரொம்ப நேரமாகும். ஆனால் கொஞ்சம் சமையல் சோடாவை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

தோசைக்கு மாவரைக்கும்போது அதில் இரண்டு வெண்டைக்காய் காம்புகளைப் போட்டு அரைத்தால், தோசை தனி ருசியுடன் இருக்கும்! உளுந்தும் அதிகம் போட்டு அரைக்கும் தேவையிருக்காது.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.   

கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சிறிதளவு சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால், அந்த மாவில் செய்யும் சப்பாத்தி கூடுதல் சுவையுடனும், ஊட்டச்சத்துடனும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com