எண்ணெய் மசாஜின் நன்மைகள்!

கூந்தலுக்கு ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது தலையில் வைக்கும் எண்ணெய். தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து ரிலாக்ஸ் கிடைக்கும்.
எண்ணெய் மசாஜின் நன்மைகள்!
Updated on
1 min read

கூந்தலுக்கு ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது தலையில் வைக்கும் எண்ணெய். தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து ரிலாக்ஸ் கிடைக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும் இவை பெரும்பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கூந்தலுக்கு எந்த எண்ணெய் ஏற்றது என்பதை பார்ப்போம்:

தேங்காய் எண்ணெய்

பாரம்பரியமாக நாம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் இவை முக்கியமானவை. தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் உச்சந்தலையை அமைதிப்படுத்த உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு அழற்சிக்கு உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. தேங்காய் எண்ணெய் மசாஜ் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. முடியை ஈரப்பதமாக வைக்க செய்கிறது. கூந்தலுக்கு பளபளப்பும் அளிக்கிறது.

நல்லெண்ணெய்

தேங்காய் எண்ணெய்க்கு அடுத்தபடியாக நல்லெண்ணெய் பாரம்பரியமானது. உடல் உஷ்ணம் தணிக்கவும் உடல் வெப்பம் குறைக்கவும் இந்த எண்ணெய் அனைத்து வயதினரிடமும் தடையின்றி பயன்படுத்தப்பட்டது. கூந்தலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது. நல்லெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் சுத்தமாக ஆரோக்கியமாக வைக்கலாம். இது பொடுகை நீக்கும், இளநரையையும் தடுக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியலில் நல்லெண்ணெய் பிரதானமானது. இந்த எண்ணெயை தனித்து பயன்படுத்தலாம். கதகதப்பான சூட்டில் மசாஜ் செய்வது கூடுதல் பலன் அளிக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் பிசுபிசுப்பாக அடர்த்தியாக இருக்கும். இது கூந்தலுக்கு பயன்படுத்தலாமா என்றும் சிலருக்கு சந்தேகம் இருக்கும். கூந்தல் இழப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் பிஜிடி 2 உள்ளது. இவை முடி இழப்பை தடுக்க கூடியது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. முடி இழப்பை குறைக்கும் விளக்கெண்ணெய்யை தனியாக பயன்படுத்த முடியாது. இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். இவை அதிக குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் மசாஜ் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

ஷாம்பு பயன்பாட்டுக்கு முன்பு எண்ணெய் மசாஜ் செய்வதால் அது முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கிறது.

அதிக வறண்ட கூந்தல் கொண்டிருப்பவர்கள் வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தலுக்கு அதிக நன்மை கிடைக்கும்.

எண்ணெய்யை சூடுபடுத்தி மசாஜ் செய்வதாக இருந்தால் அதிக சூட்டில் இல்லாமல் உச்சந்தலையில் எரிச்சல் இல்லாமல் கதகதப்பாக இருக்கும்படி வைத்து பயன்படுத்தவும். இது கூந்தலில் உள்ள ஊட்டச்சத்தை அழிக்காமல் பாதுகாக்கும்.

எண்ணெய் மசாஜ் செய்யும் போது எண்ணெய்யை நேரடியாக கூந்தலில் வைக்காமல், விரல்களால் நனைத்து மென்மையாக அழுத்தம் கொடுத்தால் கூட போதும். உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்க 15 முதல் 20 நிமிடங்கள் விரல்களால் நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முடி உதிர்வு தடுக்கப்படலாம். எண்ணெய் மசாஜ் செய்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக சிக்கில்லாமல் வைத்துகொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com