ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிதம்பரம் கத்தரிக்காய் கொத்சு

மசாலாவுக்காக என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருள்களையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 12:30 am

DIN


தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் -  7 அல்லது 8 
சின்ன வெங்காயம் - 10 
புளிச்சாறு  - எலுமிச்சம்பழ அளவு 
மஞ்சள் தூள் -  கால் தேக்கரண்டி
எண்ணெய்  - 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிப்புக்கு
வெல்லம்  - ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - அரை  தேக்கரண்டி
மசாலாவுக்கு:
மல்லி - 5 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் -  அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல்  -  6
வெந்தயம் - அரை தேக்கரண்டி

செய்முறை: 

மசாலாவுக்காக என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருள்களையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கத்திரிக்காய் மென்மையாக வதங்கும் வரை வதக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுதடுத்து,  உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

புளிச்சாற்றை அதனுடன் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்து கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், மத்து அல்லது கரண்டியால் கத்தரிக்காயை மசித்து, அவற்றோடு வெல்லத்தையும் சேர்க்கவும். குழம்பு அடர்த்தியானதும், மசாலா தூளைச் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். அவற்றிலிருந்து எண்ணெய்ப் பிரியும்வரை கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையால் தாளித்துக் கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.