டிப்ஸ்... டிப்ஸ்...

எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரணடு மேஜை கரண்டி கெட்டித் தயிர் சேர்த்து கிளறி இறக்கினால், உப்புமா அற்புதமாய் இருக்கும்.
டிப்ஸ்... டிப்ஸ்...

எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரணடு மேஜை கரண்டி கெட்டித் தயிர் சேர்த்து கிளறி இறக்கினால், உப்புமா அற்புதமாய் இருக்கும்.

கத்தரிக்காய் கூட்டோ, பொறியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலைமாவைத் தூவி 5 நிமிடங்கள் கழித்து, இறக்கினால் மணம் கமகமவென இருக்கும்.

சூப் தயாரிக்கும்போது கார்ன்பிளேக்ஸூக்கு பதில் இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, வெண்ணெயில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

தோசை, இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி தயார் செய்யும்போது, சிறிது அரிசியைப் பொரித்து சேர்த்தால் அதிக மணமும் புதுமையான ருசியும் கொடுக்கும்.

கொண்டைக் கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை முதல் நாள் ஊறப் போட மறுத்துவிட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்தப் பின்னர் குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்துவிடும்.

- சமையல் குறிப்புகள் 500 என்ற நூலிலிருந்து சி.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com