/

சின்னத்திரை மின்னல்கள்!: டிக்டாக் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும்  ரியாலிட்டி ஷோக்களிலேயே முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள ஷோ "குக் வித் கோமாளி'.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:54 pm IST

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும்  ரியாலிட்டி ஷோக்களிலேயே முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள ஷோ "குக் வித் கோமாளி'.   இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யிலும் முதலிடத்தில் உள்ளது. இதற்குகாரணம், இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது தான். இதனாலேயே,  இந்த ஷோவுக்கென்று  தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். 

அந்த வகையில்  தற்போது  ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி சீசன் -3' -இல்  புதிய கோமாளியாக  களமிறங்கியிருக்கிறார் டிக்டாக் பிரபலமான சீதாள் கிளாரின். 

இவர் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமானவர். பெங்களூரை சேர்ந்தவர்.  தனது சகோதரியுடன் சேர்ந்து இவர் டிக்டாக்கில் உருவாக்கிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக இருந்ததுள்ளது. 

இந்த அக்கா - தங்கை காம்போவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது இவர் "குக் வித் கோமாளி சீசன்- 3' நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார்.  இவர் மாடலிங் துறையிலும் பிரபலமானவர் என்று சொல்லப்படுகிறது. 

புதுப்புது கான்செப்ட்டில்  டிக்டாக்கில்  கலக்கி வந்த  இவர்,  "குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு கோமாளியாக கலக்குகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.