ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளவரசர் சார்லஸ் மனைவிக்கு ராணி பட்டம்!

இங்கிலாந்து  நாட்டில் ராணியாக  இருப்பவர்,  2-ஆம் எலிசபெத்  மகாராணி வயது 95 ஆகும். 

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், 2-ஆம் எலிசபெத் மகாராணி வயது 95 ஆகும்.

இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் இவர். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ஆம் ஆண்டு மறைந்த பின்னர், 2-ஆம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 25.

அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. எலிசபெத் மகாராணி தான் பட்டத்துக்கு வந்ததின் 70-ஆவது ஆண்டு விழாவை சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் கொண்டாடினார். தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு செய்தியும்விடுத்தார்.

அந்த செய்தியில், "உங்கள் அனைவரின் ஆதரவுக்காகவும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இவர் ராணி என்ற அந்தஸ்தில் இங்கிலாந்தில் 14 பிரதமர்களை பார்த்திருக்கிறார். இவர், பட்டத்துக்கு வந்த 70 ஆண்டுகள் ஆகியுள்ள இந்த தருணத்தில், எதிர்காலத்தில் ராணி பட்டம் யாருக்கு என்பதை அவர் கைகாட்டி உள்ளார்.

இதையொட்டி அவர் குறிப்பிடுகையில், "சார்லஸ் மன்னர் ஆகிறபோது ராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்' என தெரிவித்தார். தற்போதைய இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தில் மன்னர் பட்டம் ஏற்கிறபோது கமிலாவுக்கு ராணி பட்டம் வந்து சேரும்.

2-ஆம் எலிசபெத் மகாராணியின் இந்த அறிவிப்புக்கு இளவரசர் சார்லசும், இளவரசி கமிலாவும் நன்றி தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.

சார்லஸ் மன்னரானாலும் கமிலா கன்சார்ட் இளவரசி என்றே அழைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டது.

இப்போது 2-ஆம் எலிசபெத் மகாராணியே கமிலாவை ராணி என அழைக்கவே விருப்பம் என்று கூறிவிட்டதால் இனி அவர் ராணி பட்டம் பெறுவதில் பிரச்னை ஏதும் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.