தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஓட்ஸ் கட்லட்

சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி, இதனுடன் சேர்த்து ஒரு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.

News image
Updated On :11 ஜனவரி 2022, 8:16 am

சுந்தரி காந்தி

தேவையானவை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
இஞ்சி, பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி 
ஓட்ஸ் -  கால் கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- சிறிது  
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு  - சிறிதளவு

செய்முறை: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி, இதனுடன் சேர்த்து ஒரு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். வேகவைத்த, சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோலை உரித்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.  ஓட்ûஸ ஒரு வாணலியில் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில், அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை நடுத்தர அளவில் தட்டவும்.  தோசைக்கல்லை அடுப்பில் வைத்து  பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இதனை வறுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.  மல்லி, புதினா சட்னியுடன் வள்ளிக்கிழங்கு கட்லட் பரிமாறவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.