தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாங்காய் இஞ்சி !

மாங்காயைப்  போன்று  வாசனையும்,  லேசான இஞ்சி  சுவையும்  கொண்டது. இதில்  புரதம், மாவுப் பொருள்,  கொழுப்புச்சத்து,  கால்சியம்,   பொட்டாசியம்,  சோடியம்,  மெக்னீசியம்  பாஸ்பரஸ், இரும்புசத்து  நார்ப் பொருள்

News image
Updated On :12 ஜனவரி 2022, 12:30 am

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

மாங்காயைப் போன்று வாசனையும், லேசான இஞ்சி சுவையும் கொண்டது. இதில் புரதம், மாவுப் பொருள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் பாஸ்பரஸ், இரும்புசத்து நார்ப் பொருள்கள், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.

குண்டான உடல்வாகு உடையவர்கள் மாங்காய் இஞ்சியைத் தொடர்ந்து சமையலில் சேர்த்து வந்தால் எடை குறையும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வில்லைகளாக வெட்டி, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிட நல்ல மாற்றம் தெரியும். தோல் வியாதிலிருந்து பாதுகாப்பதில் மாங்காய் இஞ்சி முதலிடத்தை வகிக்கிறது. வயிறு உப்புசத்திற்கு தீர்வு தரும். குடல்வலிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

வயிறு குடல் பகுதியில் பூச்சிகளை அழித்து சுத்தப்படுத்தும்.

வாயுத் தொல்லையில் இருப்பவர்கள் மாங்காய் இஞ்சியைத் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, செரிமான பிரச்னை, வாயுத்தொல்லை போன்றவற்றை சரிசெய்கிறது.

குளிர்காலத்தில் உணவில் சேர்த்துக் கொள்ள குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

பித்தத்தால் ஏற்படும் கிறுகிறுப்பை போக்கும்.

மாங்காய் இஞ்சி மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட ஞாபக சக்தியை அதிகரிக்கும். இது ஒரு சிறந்த வலி நிவாரணி.

மெலிதாக நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு , மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம்.

தயிரில் நறுக்கிப் போட்டு கறிவேப்பிலை, மல்லி, உப்பு சேர்த்து கலந்து சாப்பிட தயிர்பச்சடி சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.