பாலக் முறுக்கு
பச்சரிசியை கழுவி உலர்த்தவும். உளுந்தை வெறும் வாணலியில் வறுக்கவும். இவற்றுடன் பொட்டுக் கடலையைச் சேர்த்து மாவு மில்லில் மாவாக அரைக்கவும்.


தேவையானவை:
பாலக்கீரை-ஒரு கட்டு
பச்சை மிளகாய்-3
புதினா- 2 கைப்பிடி
பச்சரிசி- 4 கிண்ணம்
உளுந்து- முக்கால் கிண்ணம்
பொட்டுக்கடலை- ஒரு கைப்பிடி
வெண்ணெய்- ஒரு மேஜைக் கரண்டி
பெருங்காயத் தூள்- அரை கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை கழுவி உலர்த்தவும். உளுந்தை வெறும் வாணலியில் வறுக்கவும். இவற்றுடன் பொட்டுக் கடலையைச் சேர்த்து மாவு மில்லில் மாவாக அரைக்கவும். இந்த மாவில் உப்பு, தண்ணீர், சீரகம், பெருங்காயத் தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், சுத்தம் செய்த பாலக்கீரை, புதினா, பச்சை மிளகாய், தண்ணீரைச் சேர்த்து நன்கு மாவாக அரைக்கவும். இந்தச் சாற்றை மாவில் சேர்த்து, முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை நாழியில் போட்டு சூடான எண்ணெயில் முறுக்குகளாகப் பிழிந்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...