பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டபேதாராக முதன் முறையாக பெண்!

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் டபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 ஜூன் 2022, 12:30 am

பாரத்

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் டபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்களுக்கு நிகராக,  பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர்.   
1862-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில், "டபேதார்'  எனும் பதவியில் பெண்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்கும், சேம்பரில் இருந்து வீட்டுக்கு செல்ல காருக்குச் செல்லும்போதும் உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் வருவதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நீதிபதிக்கு முன்பு கையில் செங்கோல் ஏந்தி நடந்து செல்வர்.  இவர்கள் வெள்ளை நிற ஆடையும்,  தேசிய சின்னம் அணிந்த சிவப்பு நிற தலைப்பாகையும்,  உடலின் குறிக்கே சிவப்புப் பட்டை அணிந்து,  செங்லோலை ஏந்தி, வழிவிடும்படி ஒலி எழுப்பிக் கொண்டே நீதிபதிகளுக்கு முன்னர் செல்வர். காலை முதல் மாலை வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பர்.
இந்தப்  பதவிக்கு முதன் முறையாக திலானி என்ற பெண் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவின் சேம்பரில் பணியாற்றி வருகிறார்.  உதவியாளர் பணிக்கு தேர்வாகி பணியாற்றி வந்தவரை தனக்கு டபேதாராக நியமிக்கும்படி நீதிபதி கேட்டுப் பெற்றதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல்,  தமிழக சட்டப் பேரவையில் பேரவைத் தலைவருக்கு உதவியாக இருக்கும் "துபாஷ்'  என்ற பணிக்கு ராஜலட்சுமி என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.