47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அங்கூரி கேசர் பேட்டா (ராஜஸ்தான்)

பாதாம் ஊறவைத்து, தோல் எடுத்து மெலிதாக சீவிக் கொள்ளவும். பூசணிக்காயின் தோல், குடல் பகுதியை சுத்தம் செய்யவும். ஐஸ்க்ரீம் எடுக்கும் கரண்டியில் உருண்டைகளாக எடுக்கவும்.

News image
Updated On :6 நவம்பர் 2022, 12:30 am

ந.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

கெட்டியான வெள்ளைப் பூசணி- 1 கிலோ
சர்க்கரை- 2 கிண்ணம்
குங்கமப்பூ- 2 சிட்டிகை
சுண்ணாம்பு- 1 சிட்டிகை
பாதாம்- 10

செய்முறை: 

பாதாம் ஊறவைத்து, தோல் எடுத்து மெலிதாக சீவிக் கொள்ளவும். பூசணிக்காயின் தோல், குடல் பகுதியை சுத்தம் செய்யவும். ஐஸ்க்ரீம் எடுக்கும் கரண்டியில் உருண்டைகளாக எடுக்கவும்.  (முடியாவிட்டால் ஒரு அங்குல சதுரங்களாக நறுக்கவும்). இதை முள்கரண்டியால் குத்திவிடவும். 

2 கிண்ணம் தண்ணீரில் சுண்ணாம்பு சேர்த்து, கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து, பூசணித்துண்டங்கள் சேர்த்து மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, நீரை வடிக்கவும்.

அரை கிண்ணம் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து, 1 கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும். குங்குமப்பூ சேர்க்கவும். அடுப்பை அணைத்து, பூசணித் துண்டுகள் சேர்த்து உடனே எடுத்து தட்டில் அடுக்கவும். பாதாம் அலங்கரித்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.