அதிரசம்
அரிசியை நன்றாகக் களைந்து வடிகட்டவும். நீர் வடிந்தவுடன் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.


தேவையான பொருள்கள்:
அரிசி- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி- 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்றாகக் களைந்து வடிகட்டவும். நீர் வடிந்தவுடன் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். நீர்த்தப் பதத்தில் வெல்லப் பாகு தயாரிக்கவும். இதை வடிகட்டி மீண்டும் சிறிய தீயில் அடுப்பில் வைத்து, பாகு கெட்டியாகும் வரை கிளறவும். ஏளக்காய்ப் பொடியை சேர்க்கவும். பாகை அடுப்பிலிருந்து இறக்கி அதில் சிறிது, சிறிதாக அரிசி மாவைத் தூவி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறவும்.
இந்தக் கலவையை ஈரத் துணியால் மூடி பத்து மணி நேரம் வைக்கவும். பிறகு கலவையை ஈரத் துணியால் மூடி பத்து மணி நேரம் வைக்கவும். பிறகு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வடை தட்டுவதுபோல், விரல்களால் மெலிதாகக் கட்டவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து, அதில் தட்டிய அதிரசங்களைப் போட்டு நன்றாகச் சிவக்கும் வரை வேக விடவும். வடிகூடையில் போட்டு எண்ணெயை வடிக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...