சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

வல்லாரை கீரை அடை

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி , சிவப்பு மிளகாய் ஆகியவற்றை முதல் நாள் இரவு  ஊற வைக்க வேண்டும்.

Published On :

தேவையானவை:

வல்லாரை கீரை- 1 கட்டு 
உளுத்தம் பருப்பு - 1/4  கிண்ணம்
துவரம் பருப்பு - 1/4  கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/4  கிண்ணம்
இட்லி அரிசி - 1/2  கிண்ணம்
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய்- தேவையான அளவு
கடுகு , சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2  தேக்கரண்டி
கறிவேப்பிலை,இஞ்சி - சிறிதளவு
தேங்காய்  துருவல்- 2 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு

செய்முறை :

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி , சிவப்பு மிளகாய் ஆகியவற்றை முதல் நாள் இரவு  ஊற வைக்க வேண்டும். காலையில் கிரைண்டரில் அடை பதத்தில் அரைக்க வேண்டும். வல்லாரை கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து,  அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.  பின்னர், இஞ்சி, தேங்காய்  துருவல் சேர்த்து வதக்கவும். 

தொடர்ந்து,  கறிவேப்பிலையை சிறிதாகக்  கிள்ளி மாவில் போடவும்.  பிறகு,  நறுக்கிய  வல்லாரை கீரையை சேர்த்து  தேவையான உப்பும் சேர்த்து நன்குக் கலக்கி வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் கலவையில் போட்டு மாவு கலவையை தயாராக வைக்கவும்..இப்போது அடுப்பில் வாணலியை வைத்து அடையாக வார்த்து எடுக்கவும். சுவை மிகுந்த அடை தயார். அதை சட்னி கலந்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.