புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோதுமை ரவை பிரியாணி

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை ஒன்றிரண்டாக அரைக்கவும்.  பின்பு காய்கள் மற்றும் காளானையும் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.  

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 6:30 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை - 1 கிண்ணம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1
காய் வகைகள் - 1 கிண்ணம்
காளான் - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 தேக்கரண்டி
தண்ணீர்- 2 கிண்ணம்
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
அரைப்பதற்கு : 
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
மிளகு - கால் தேக்கரண்டி
புதினா - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தாளிப்பதற்கு : 
நெய் - 2  தேக்கரண்டி
லவங்கம் - 2
பட்டை - 1 
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
முந்திரி - 6
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை ஒன்றிரண்டாக அரைக்கவும்.  பின்பு காய்கள் மற்றும் காளானையும் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.  அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து கோதுமை ரவையை நெய் சேர்த்து கைபொறுக்கும் சூட்டில் வாணலியாக வறுத்துகொள்ளவும். பிறகு தனியாக நெய்விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துகொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கள், காளான் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும், பிறகு அரைத்த கலவை சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்கு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதங்கியதும் அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வறுத்த கோதுமை ரவை சேர்த்து கலக்கிவிட்டு, மிதமான தீயில் மூடிவைத்து வேகவைக்கவும். கோதுமை ரவை நன்கு வெந்ததும் கிளறி அதில் கொத்தமல்லித்தழை, புதினா, வறுத்த முந்திரி, நெய், எலுமிச்சைச்சாறு சேர்த்து, கிளறி இறக்கினால் கோதுமை ரவை பிரியாணி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.