
தேவையானவை:
உளுந்து ஒரு கிண்ணம்
பச்சரிசி ஒரு மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு கால் கிண்ணம்
வெல்லம் ஒன்றரை கிண்ணம்
நெய் தேவையான அளவு
செய்முறை:
உளுந்து, பச்சரிசி, பாசிப் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு பவுடராக்கவும்.
அந்த பவுடரை நீர்விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். கெட்டியான மோர் பதம். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை நீர்விட்டுக் கரைத்துக் கொதிக்கவிட்டு, ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து இடைவிடாமல் கிளறி, இடையிடையே நெய்யையும் விட்டு எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.