நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுருள்அரிசி

பச்சரிசியைக் கழுவி நீரை வடித்து துணியில் உலர்த்தவும். பாதி உலர்ந்ததும் வெறும் வாணலியில் மிதமாக வறுக்கவும். மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 4:11 pm

கவிதா சரவணன்

தேவையானவை

பச்சரிசி  2 கிண்ணம்
துருவிய வெல்லம்   ஒன்றரை கிண்ணம்
துருவிய தேங்காய்  கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள்  ஒரு தேக்கரண்டி
பொட்டுக் கடலை  2 மேசைக் கரண்டி

செய்முறை

பச்சரிசியைக் கழுவி நீரை வடித்து துணியில் உலர்த்தவும். பாதி உலர்ந்ததும் வெறும் வாணலியில் மிதமாக வறுக்கவும். மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும்.  வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி,  ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்.  பாகு கொதிக்கும்போது தேங்காயைத் துருவலை அதில் போட்டு,  பொட்டுக் கடலையும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் பாகு வந்ததும் இறக்கி வைத்துவிடவும்.  ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். ஆறியதும் உடைத்த அரிசி ரவையை அதில் போட்டுக் கிளறவும்.  சுருள் அரிசி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.