தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புளிச்சக்கீரைசாதம் 

வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். பச்சரிசியை  4  கிண்ணம் நீர்விட்டு உதிர் உதிராக வடிக்கவும்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

கவிதா சரவணன்


தேவையானவை: 

பச்சரிசி  2 கிண்ணம்
நல்லெண்ணெய்  ஒரு மேசைக்கரண்டி
உப்பு  தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க:  
சுத்தம் செய்த புளிச்சக் கீரை  
2  கிண்ணம்
காய்ந்த மிளகாய்  3 
மல்லி (தனியா),  உளுத்தம் பருப்பு,  கடலைப் பருப்பு  தலா 2 மேசைக்
கரண்டி
பெருங்காயத்தூள்  ஒரு தேக்கரண்டி
எண்ணெய்  2  மேசைக்கரண்டி

செய்முறை: 

வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். பச்சரிசியை  4  கிண்ணம் நீர்விட்டு உதிர் உதிராக வடிக்கவும்.  வாணலியில் நல்லெண்ணெய்விட்டு,  உப்பு சேர்த்து பொடித்த பொடியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி,  உதிரி உதிரியாக சாதத்தையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

முதலில் புளிச்ச கீரையை  நறுக்கி எண்ணெயில் மொறுமொறுப்பு வரும் வரை வறுத்துத் தனியாக வைத்துகொண்டு,  பிறகு தனியா,  பருப்புகளையும் வறுக்க வேண்டும்.  மிக்ஸியில் சுற்றும்போது முதலில் பருப்புகளை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பிறகு கீரையைப் போட்டுச் சுற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.