தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சரித்திரப் பெண்கள்...!

இந்தியாவில் 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர், வரும் நவம்பரில் உலக அழகிப் போட்டியின் 71ஆவது விழா நடைபெறுகிறது.

News image
Updated On :17 ஜூன் 2023, 4:16 pm

இந்தியாவில் 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர், வரும் நவம்பரில் உலக அழகிப் போட்டியின் 71ஆவது விழா நடைபெறுகிறது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் ஜூலியா மார்லி மேலும் கூறுகையில்,  ""இந்தியாவில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பாளர்கள் ஒருமாதம் தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்'' என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா பரியா, ஐஸ்வர்யா ராய், டயானா ஹெய்டன், யுக்தா முகி, பிரியங்கா சோப்ரா, மானுஷி சில்லர் ஆகியோர் உலக அழகிப் பட்டங்களை இதுவரை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு உலக அழகி போட்டியில் பங்கேற்க இருப்பவர் இந்திய அழகி சினி ஷெட்டி. 

முதலாவது பெண் ராணுவ அதிகாரி: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்னல் பிரியங்கா சிங் முன்வரிசை கோட்ட ராணுவ தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார்.

இதனால், அவர் ராணுவத்துக்கு பொருள் விநியோகம், போக்குவரத்து வசதி அளிக்கப்பதற்கான முதலாவது பெண் அலுவலர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

விளம்பரத் தூதரானார் ஜோதிகா: முன்னணி நகை வணிக நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஜோதிகா அண்மையில் பொறுப்பேற்றார்.  

நாட்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிவர்சபிள் தங்க நகையான ஸ்வர்ணலக்ஷண கலெக்ஷனுக்கு பிரத்யேகமான விளம்பரத் தூதர் இவர்.

மாரத்தானில் சேலையில் அசத்திய பெண்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  மதுஸ்மிதா ஜெனா,  பிரிட்டனில் உள்ள மான்செஸ்டரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். ஒடிஸாவைப் பூர்விகமாகக் கொண்டவர் இவர் அண்மையில் அங்கு நடைபெற்ற 42.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தானில் பங்கேற்று, 4 மணி நேரம் 50 நிமிடங்களில் இலக்கை எட்டியிருக்கிறார்.

போட்டியில் பங்கேற்றோர்  விளையாட்டு உடை அணிந்திருக்க,  ஒடிஸாவின் பாரம்பரியமான "சம்பல்புரி' கைத்தறிச் சேலையை அணிந்து மதுஸ்மிதா ஜெனா அசத்தினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ""சேலை அணிந்து மாரத்தான் ஓடியது நான் மட்டுமே.  நீண்ட தூரம் சேலையில் ஓடியது சவால்தான்!'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.