கோடா மசாலா (மகாராஷ்டிரம்)

ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் தனியா வறுத்து எடுக்கவும். எள் வறுக்கவும். கொப்பரை துருவல் சேர்த்து வறுக்கவும்.
கோடா மசாலா (மகாராஷ்டிரம்)

தேவையானவை: 

எண்ணெய் 2 மேசைக்கரண்டி
தனியா, எள், கொப்பரை துருவல் தலா 4 மேசைக் கரண்டி
சீரகம், ஷாகிஜீரா, கசகசா, மஞ்சள் தூள் தலா 1 மேசைக்கரண்டி
அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை, கறுப்பு ஏலக்காய், கல்பாசி, கிராம்பு, பச்சை ஏலக்காய் தலா 2
பெருங்காயத் தூள் மிளகு அரை மேசைக்கரண்டி
பட்டை 1 அங்குலத் துண்டு
மிளகாய் வற்றல் 6

செய்முறை:

ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் தனியா வறுத்து எடுக்கவும். எள் வறுக்கவும். கொப்பரை துருவல் சேர்த்து வறுக்கவும்.  1 மேசைக் கரண்டி எண்ணெயில் மீதமுள்ள பொருள்களைச் சேர்த்து, வறுத்து மொத்தமாகப் பொடிக்கவும். கிரேவி செய்யும்போது, நெய், கடலை எண்ணெய் சேர்த்து செய்வது இதன் ஸ்பெஷல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com