காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செட்டிநாடு வெஜிடபிள் கறி

முதலில் பச்சை நிற கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை  நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

News image
Updated On :15 அக்டோபர் 2023, 12:12 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள் :

பச்சை நிற கத்திரிக்காய் 500 கிராம்
உருளைக்கிழங்கு  400 கிராம்
பெரிய வெங்காயம்  3
பீன்ஸ்  200 கிராம்
முட்டைக்கோஸ்  300 கிராம்
பட்டாணி  200 கிராம்
எண்ணெய்  தேவையான அளவு 
உப்பு  தேவையான அளவு
கடுகு  கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை  10 இலைகள் 
அரைக்க தேவையானப் பொருள்கள் :
கசகசா  2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய்  10
மிளகு  கால் தேக்கரண்டி
இஞ்சி  சிறு துண்டு 
பூண்டு  10 பல் 
வெங்காயம்  2 கிண்ணம்
சீரகம்  1 தேக்கரண்டி
சோம்பு  1 தேக்கரண்டி

செய்முறை :  

முதலில் பச்சை நிற கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை  நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.  பின்னர், கசகசா, மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில்,  பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் ஆகியவற்றை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதங்கி, அதனுடன் கத்திரிக்காயை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வதக்கவும். வேக வைத்த காய்கறிகளை சேர்த்து மிதமான தீயில் கலவை கெட்டியாக வரும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.