மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வெந்தயத் துவையல்

முதலில் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்க வேண்டும்.

News image
Updated On :15 அக்டோபர் 2023, 12:09 pm

தேவையான பொருள்கள் :

வெந்தயம்  100 கிராம்
மிளகாய்  10
புளி, வெல்லம்  சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு  தேவையான அளவு

செய்முறை : 

முதலில் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்க வேண்டும். அதிகமாக வெந்தயத்தை வறுத்துவிட்டால் கசந்துவிடும். எனவே லேசாக வறுத்தெடுக்க வேண்டும். பின்னர்,  புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிளகாயையும் எண்ணெயில் போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.  பின்னர்,  அம்மியில் வெந்தயத்துடன், ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும். கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். பிறகு வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.