தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆரோக்கிய குறிப்புகள்...

முருங்கை இலை, புதினா இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ளவும்.

News image
Updated On :28 அக்டோபர் 2023, 4:10 pm

முருங்கை இலை, புதினா இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ளவும். தினமும் இந்தப் பொடியில் இருந்து அரை தேக்கரண்டி எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்,  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பல நோய்கள் குணமாகும்.  

வாழைத்தண்டை சாப்பிட்டால், குடலில் சிக்கி கிடக்கும் தலைமுடி, நஞ்சு ஆகியன வெளியேறும். மூல நோயால் ஏற்படும் வலி குணமாகும். வாழைத்தண்டு உடலுக்கு வலிமையையும் அளிக்கும்.  ரத்த நோய்கள், பிறப்புறுப்பு நோய்களுக்கும் நல்ல மருந்தாகும்.

வாழைப்பூவின் சாறைத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்தப் பேதி சரியாகும். கை, கால் எரிச்சல், இருமல், மூலம், மேக நோய் ஆகியனவற்றையும் போக்கும்.

புளிப்பு ஏப்பம் உள்ளவர்கள் சீரகத்தைப் பொடி செய்து செய்து சூடான நீரில் போட்டுக் குடித்தால் குணமாகும்.

மஞ்சள் தூளை வேப்பெண்ணெயில் கலந்து மூக்குப் புண் மீது தடவினால், விரைவில் குணமடையும். நெய்யுடன் மஞ்சள் தூளைக் குழைத்துத் தடவினால், தொண்டைப் புண் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.