ரவா லட்டு
அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.


தேவையான பொருள்கள் :
ரவை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கிண்ணம்
சர்க்கரை - ஒன்றரை கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
நெய் - அரை கிண்ணம்
உடைத்த முந்திரி, திராட்சை - தலா 10
செய்முறை:
அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருள்களுடன் ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கிசிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...