தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கஸ்தா ஆலு (மகாராஷ்டிரா)

தக்காளி, வெங்காயத்தை அரைக்கவும். உருளைக்கிழங்கை தோலுடன் வேக வைக்கவும். அதை உள்ளங்கையில் அழுத்தி வட்டமாகச் செய்யவும். எண்ணெயில் பொரிக்கவும்.

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:30 pm


தேவையான பொருள்கள்:

சின்ன உருளைக்கிழங்கு 15
தக்காளி வெங்காயம் தலா 2
உப்பு, எண்ணெய், சீரகம் தேவையான அளவு
சோம்பு, தனியா, வேர்க்கடலை தலா 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 5
கொப்பரைத் தேங்காய் 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை: 

தக்காளி, வெங்காயத்தை அரைக்கவும். உருளைக்கிழங்கை தோலுடன் வேக வைக்கவும். அதை உள்ளங்கையில் அழுத்தி வட்டமாகச் செய்யவும். எண்ணெயில் பொரிக்கவும். சீரகம், தனியா, சோம்பு, வேர்க்கடலை, கொப்பரையை விழுதாக அரைக்கவும். வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அரைத்த தக்காளி விழுது, 2 கிண்ணம் தண்ணீர், தேவையான உப்பை சேர்க்கவும். பொரித்த உருளை, அரைத்த விழுது சேர்க்கவும், தளதளவென கொதிக்கும்போது, அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லியில் அலங்கரித்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.