காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரோக்கியமாக வாழ...

நோயின்றி வாழ்வதே மனிதர்களுக்கு ஆசை.   ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் திறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்.  

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:30 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

நோயின்றி வாழ்வதே மனிதர்களுக்கு ஆசை.   ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் திறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்.  

தரமான பசி

உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும்.  குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும். உண்ட உணவு சுலபமாகச் செரிக்க வேண்டும். உண்ட பிறகு வயிறு உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது.

தரமான தாகம்

உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும்.  உதடு காய்வது தாகம் இல்லை.  தாகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.  தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது. 

தரமான உறக்கம்

படுத்த 10 நிமிடத்தில் உறக்கம் வர வேண்டும்.  இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது. தூங்கி எழும்பொழுது அசதி இருக்கக் கூடாது. தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் 

முழுமையான கழிவு நீக்கம்   

காலையில் தினமும் சுலபமாக இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும். அவை முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும். சிறுநீரும் சுலபமாக வெளியேற வேண்டும். 

மன அமைதி

மனம் அமைதியாக இருத்தல் வேண்டும்.  எந்தச் சூழ்நிலையிலும் மன பயமோ, சஞ்சலமோ அடையக் கூடாது.  அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் இருக்கக் கூடாது. எப்பொழுதும் சம நிலையிலேயே மனம் இருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.