அரிப்பு, சொறி போன்ற சரும நோய் உள்ளவர்கள் தினசரி குளிப்பதற்கு அரப்புத் தூளைப் பயன்படுத்தவும்.
தேனுடன் சுக்கைக் குழைத்து உணவுக்கு முன் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர தொண்டைக் கட்டு சரியாகும்.
தலைவலி, தலைச்சுற்றலைப் போக்க, அடிக்கடி சுக்கு கஷாயம் அருந்தி வர வேண்டும்.
சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்து குழைத்து உண்ண சூலை நோய் குணமாகும்.
திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊற வைத்து, சாறு பிழிந்து பருகினால் இதய நோய் அகலும்.
பெண்கள் வாரத்துக்கு இருமுறை மஞ்சள் தேய்த்து குளித்தால், தேவை இல்லாத இடங்களில் முடி வளராது.
வசம்பை சிறிது நீர்விட்டு மை போல் அரைத்து தலையில் பூசி அரை மணி நேரத்துக்குப் பின்னர் தலையை அலசினால், பேன்கள் மடியும்.
கடுக்காய், மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.