
தேவையான பொருள்கள்:
முளைவிட்ட கொள்ளு, துவரம் பருப்பு தலா 50 கிராம்
பச்சைப் பயிறு, கடலைப் பருப்பு தலா 25 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
காய்ந்த மிளகாய் 6
பெருங்காயப் பொடி, கடுகு 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சைப் பயறு, மிளகாய் ஆகியவற்றை மூன்று மணி நேரம் தண்ணீர்விட்டு ஊற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி அரைத்த மாவை உருண்டையாகப் பிடித்து வைத்து வேகவிட வேண்டும். ஆறியதும் கட்டியில்லாமல் உதிர்த்துகொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு உதிர்த்து வைத்துள்ள பருப்பையும், வேக வைத்த கொள்ளுப் பயிறையும் சேர்த்து கிளற வேண்டும். மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். தேவையானால் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.