அவரைக்காயில் "அவரேகாலு' என்பது ஒரு வகை. கர்நாடகத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் பேலூரில் உள்ள ஹளபேடு ஸ்பெஷல் இது.
இந்த அவரைக்காய் சிறியது. ஆனால் சுவையானது. பொதுவாக, பயிர் நோயால் பாதிக்கப்படாததால் இந்தப் பகுதியில் ஏராளமாக பயிரிடப்படுகிறது. நல்ல புரத உணவு.
முதிர்ச்சி அடையாத காய்களில் வைட்டமின் ஏ, கே அதிகம். புதிய காய்களில் வைட்டமின்-சி அதிகம். டிசம்பர் மாதத்தில் இதன் விற்பனைக்காகவே ஹளபேடில் மாலையில் சந்தை கூடும். இதனை இட்லி, தோசை, உப்புமா, கலவை சாதம், ரசம், சாம்பார், பிசிபேலாபாத், இனிப்புகளில் கூட இணைப்பர்.
ஜனவரியில் பெங்களுரில் மேளா நடக்கும். அதில் இதன் பச்சை ஜிலேபி பிரபலம். அறுபதுக்கும் அதிகமான பண்டங்களை செய்து மேளாவுக்கு வருபவர்களிடம் காட்சிப்படுத்தி விற்பர். இந்த வருடம் விற்பனைக்கு வரத் துவங்கி விட்டது. டிசம்பர், ஜனவரிதான் இதற்கு சீசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.