புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பட்டாணி மசாலா கறி

சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி மசாலா கறி செய்முறை

News image
Updated On :6 ஜூலை 2024, 5:19 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

பச்சை பட்டாணி- 1 கிண்ணம்

பெரிய வெங்காயம், தக்காளி- தலா 1

பச்சை மிளகாய்- 3

இஞ்சி பூண்டு விழுது- அரை தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 1

மல்லித் தூள்- அரை மேசைக் கரண்டி

மிளகாய், கரம் மசாலா- தலா கால் மேசைக் கரண்டி

மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி

கடுகு- கால் தேக்கரண்டி

உப்பு, தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு

கறிவேப்பிலை- 1 கொத்து

கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி

செய்முறை :

முதலில் பட்டாணியை வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்க்கவும். பிறகு பட்டாணி சேர்த்து தண்ணீரை விட்டு வேகவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலையைத் தூவிப் பரிமாறவும். இதை சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.