சாதனைப் பெண்மணிகள்..

ரோகிணி நிலேகனி: நன்கொடை வழங்கும் சாதனைப் பெண்மணி
Updated on
1 min read

நாட்டில் நன்கொடை வழங்குவதில் "நம்பர் ஒன் பெண்மணி'யாகத் திகழ்பவர் ரோகிணி நிலேகனி. இவர் 2022-ஆம் ஆண்டில் பல சமூக நலப் பணிகளுக்காக, ரூ.120 கோடி நன்கொடையை அளித்தார். 2023-இல் ரூ.170 கோடியாக நன்கொடையை உயர்த்தினார்.

எழுத்தாளரான இவர், சுற்றுச்சூழல், கல்வித் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் நந்தன் நிலேகனி, தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர். மும்பையில் பிறந்த ரோகிணி, எல்பின்ஸ்டன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அவர், தற்போது "ரோகிணி நிலேகனி' அறக்கட்டளையின் பொறுப்பாளராக உள்ளார்.

இந்தியாவின் மிக இளவயது பயணிகள் விமானி என்ற பெருமையைப் பெற்றவர் சாக்ஷி கோச்சார். இவர் தனது பதினெட்டாம் வயதில் விமானிக்கான உரிமத்தைப் பெற்றார்.

ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு உள்பட்ட பர்வானூ நகரைச் சேர்ந்த இவர், முதலில் விமானப் பயிற்சியை மும்பையிலும், பின்னர் அமெரிக்காவிலும் பெற்றார். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 21-இல் தனியாக விமானத்தில் பறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com